திங்கள், 14 டிசம்பர், 2009

தேடுகிறேன்

நாளை விடுமுறைக்கு செல்கிறேன் . ராணுவத்தில் சேர்ந்த புதிதில் விடுமுறைக்கு செல்வதை நினைத்தாலே மனது தித்திக்கும் . இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது . ஏன் என எனக்கே தெரியவல்லை . வயது வளர வளர பக்குவம் வந்துவிட்டதா . இல்லை எனக்குள் ஏற்பட்ட புதிய மாற்றங்களா .

என் வசம் இருக்கும் பதினாறு நாட்களை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும் என நினைக்கிறன் . என்னை பாதித்த எழுத்தாளர்கள் அனைவரையும் போய் சந்திப்பது நிறைய நூல்கள் வாசிப்பது , வீட்ற்கு சென்று அம்மா , அப்பாவிற்கு சேவை செய்வது .

புதிய நண்பர்களை தேடிகொள்வது . என்னுடைய நிக்கி நாயுடன் சந்தோசமாக விளையாடி திரிவது  , வீட்டிற்கு முன் இருக்கும் அரசமர நிழலில் அமர்ந்து தனிமையை ருசிப்பது . 

ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்வது என எத்தனையோ ஆசைகளுடன் அஸ்ஸாமில் இருந்து நாளை பயணிக்கிறேன்

வருகிற பத்தொன்பதாம் தேதி சென்னையில் திரு ஜெயமோகன் அவர்களை சந்தித்து பேசவேண்டும் என நினைத்துள்ளேன் .ஏழாம் உலகம் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வேன் . பின் ஈரோடு சென்று வலைபதிவாளர்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டு எனது ஊருக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டுளேன் .

புதிய மனிதர்களை தேடுகிறேன் ,  பல முகம் தெரியாத நல்ல உள்ளங்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை ஒன்றுமட்டுமே என்னை சுற்ற வைத்துக்கொண்டுள்ளது . தேடுதல் தானே வாழ்க்கையே ...

வியாழன், 10 டிசம்பர், 2009

நந்தலாலா -இது மிஸ்கினின் அவதாரம்

நந்தலாலாவின் பாடல்களை கேட்ட தருணத்தில் இருந்தே , படத்தை காண வேண்டும் என்ற ஆவல்  தொற்றிகொண்டது . படத்தின் இசை மனதை நெகிழ செய்துவிட்டது . ஏற்கனவே சித்திரம் பேசுதடி , அஞ்சாதே என்ற மிஸ்கினின் படங்களின் மூலம் நான் அவரின் தீவிர ரசிகனாய் மாறிவிட்டேன் .

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடித்துள்ளார் . சமிபத்தில் மிஸ்கின் அவர்களை பற்றி சாரு எழுதியதை வாசித்தேன் . சாரு யாரையும் அவ்வளவு சீக்கிரம் புகழ மாட்டார் . அவரே நந்தலாலாவை பார்த்துவிட்டு நெகிழ்ந்து பாராட்டியது .  மிஸ்கின் என்ற பிரம்மாவை இன்னும் உயரத்தில் வைத்துவிட்டது .


எனக்கு அவர் படங்களில் இருக்கும் எதார்த்தம் , எளிமை , படம் முழுவதும் படர்ந்திருக்கும் மெல்லிய இருள் எல்லாமே மனதை கவரும் .

நடிகர்களுக்காகவே படங்கள் ஓடிய காலங்கள் போய் இப்போது இயகுனர்களுக்காக திரைப்படம் ஓடும் காலம் வந்துவிட்டது .


படம் பார்க்க ஆவலாய் உள்ளது அந்த இருள் , அந்த எளிமை , மனதை மயக்கும் இசையென படத்தை பற்றிய கற்பனை நெஞ்சில் ஊறிக்கொண்டே உள்ளது .

விடியலை தேடி



தினமும் விடிகிறது
அது எனக்கான
விடியல்  அல்ல..

விடியல்  வெளிச்சத்தை
மட்டும் உணர்த்துவதா
இருட்டை    மட்டும்
போக்குவதா
அல்ல..

விடியல் கலங்கிய நீரினுள் 
கிடைக்கும் தெளிவு  ,
இருளை களைக்கும்
ஒரு தீபச்சுடர்..

மொவுனத்தை களைக்கும்
இனிய சப்தம் ..

எங்கே அந்த
சப்தம் ..
எங்கே அந்த
தீபச்சுடர் ..
எங்கே அந்த
தெளிவு ..

தினமும் விடியலை
தேடுகிறேன்
விரைந்தோடும் இந்த
பொழுதுகளில் ..

செவ்வாய், 8 டிசம்பர், 2009

ஓலம் குறும்படம்

இன்னும் மனதில் பெரும் வலியை தந்துகொண்டுதான் இருக்கிறது ஈழம் பற்றிய நினைவுகள் .. நம் சகோதரர்கள் , சகோதரிகளின் துயர் துடைக்க நம்மால் முடியவில்லையே என்ற குற்றவுணர்வு  மனதின் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டு கனன்று கொண்டுதான் உள்ளது .


குறும் படங்களை காண வலைத்தளத்தில் தேடிகொண்டிருந்தேன் . அப்போதுதான் ஓலம் என்ற இந்த குறும் படத்தை பார்த்தேன் .
சில மணித்துளிகளே ஓடும் படமானாலும் போர் என்ற ஒன்றை குழந்தைகள் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளார்கள் , அந்த குண்டுகள் தாக்கும் போது குழந்தைகளின் மன நிலை என்னவாய் இருக்கும் என்ற விசயத்தை மிக அழகாக சொல்லி உள்ளார் இயக்குனர் .

ராமேஸ்வரத்தில் படம் தொடங்குகிறது அந்த கடல் , அந்த அப்பாவி மக்கள் , வீடிழந்து , உறவுகளை இழந்து எல்லாம் இழந்து அகதிகலாக வரும் மக்கள் , காட்சிகள் மிக இயல்பாய் இருந்தது . கூடவே ஒரு மென் சோகத்தை சுமந்து வரும் இசை ,மனதில் இந்த குறும்படம் பதிந்ததற்கு இசையும் மிக முக்கிய காரணம் .

அந்த குட்டி பெண் தலையில் அடிபட்ட சிறு காயத்துடன் தன் தந்தை மடியில் அமர்ந்துள்ளாள் . அவளின் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது ..


பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . பாடம் படிக்கும் முன்னரே நாம் எப்படி தற்காத்து கொள்வது என்பதை ஆசிரியர் சொல்லி தருகிறார் . விமானங்களின் சப்தம் கேட்ட உடனே நீங்கள் பதுங்கு குழிகளில் சென்று ஒளிந்து கொள்ள வேண்டுமென சொல்கிறார் . குழந்தைகள் ஓடி பதுங்கு குழிகளில் ஒளிந்து கொள்கின்றனர் .   தினமும் இந்த காட்சிகள் நடைபெறுகிறது .. மற்றொரு நாள் பள்ளி விட்டு செல்லும்போது வானத்தில் விமானம் பறக்கிறது குழந்தைகள் அனைவரும் ஓடி பதுங்கு குழிகளில் மறைந்து கொள்கின்றனர் . படத்தின் கதாநாயகியான சிறு குழந்தையும் ஓடுகிறது . அப்போது முதன் முதலில் ஆசிரியர் சொன்னது நினையில் வருகிறது . ஓடுகிறாள் எங்கே போவதென்பது அவளுக்கு தெரியவில்லை ..

டீச்சரின் குரல் தொடர்ந்து கேட்டு கொண்டுள்ளது .பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய தொட்டி உள்ளது . அதில் விழுந்து விடுகிறாள் ..  தெரியாமல் அந்த குட்டி பெண் .. பின்பு ஒரு வழியாய் காப்பாற்றுகின்றனர்.


கனவுகள் நிறைந்த , சுதந்திரமான அந்த பால்ய பருவத்தில் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பாடத்தோடு உயிரை காக்க பதுங்கு குழிகளில் ஓடி போய் பதுங்கும் காட்சிகள்தான் மனதை நெருடுகிறது . அந்த காட்சிதான்   படத்தின் ஒரு வரி  கதையே .




குழந்தையின் உலகை அழகாய் காண்பித்துள்ளார் இயக்குனர் . கடைகளில் சென்று மிட்டாய் வாங்குவது , பள்ளியின் மணி ஓசையை கேட்ட பின் சந்தோசமாய் ஓடி வரும் குழந்தைகள் ,சிரித்து மகிழ்ந்து ஓடி திரியும் குழந்தைகள் என இயக்குனர் படம் பார்க்கும் ஒவ்வொருவர்குள்ளும் தன் பால்ய கால நினைவுகளை எழுப்பி விடுகிறார் .

படத்தில் நிரம்பி வழிகிறது இசையும் எதார்த்தமும்

படம் பார்த்துவிட்டபின் , ஒரு நல்ல படம் பார்த்தேன் என்ற மனநிலை மனதில் பசுமையாய் எழுந்தது .மீண்டும் அந்த குழந்தையை காட்டுகிறார்கள் குழந்தையின் முகம் ஆயிரம் கேள்விகளை நம் முன் வைப்பது போல் இருந்தது ..




யுத்தம் நடக்கும் நாட்டில் நிகழும் நிகழ்வுகளினால் குழந்தைகள் உலகம் எவ்வாறு பாதிக்க படுகிறது என்பதை அழகாய் சொல்லிருக்கும் இயக்குனருக்கு ஒரு ராயல் சல்யூட் ..
.படம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த படம் பற்றிய  எண்ணங்களை இங்கே தெரிவிக்கலாம் கருத்துகளாக .. 

ஒப்பனை






ஒப்பனை செய்யாதீர்கள்
பெண்களே
ஒப்பனை என்பது
ஒன்றை மறைத்து
ஒன்றை கொடுப்பதுதானே ..



 ஏன் - அந்த
ஒன்றை மறைக்கிறீர்கள் ..
அந்த ஒன்றுதானே
உறுதியானது
உண்மையானது ..


ஒளிகொடுத்து
உயிர் வளர்க்கும்
சூரியன்
ஒப்பனைசெய்தால் ..


இரவை தன்
அர்ப்பணிப்பால்
வெளிச்சமாக்கும்
சந்திரன்
ஒப்பனை செய்தால் ..


தன் தலை அசைப்பால்
அனைவரையும் தாலாட்டும்
மரங்கள் ஒப்பனை   செய்தால் ..


தன் ஓட்டத்தால்
அனைவரின் வாழ்வையும்
ஓட வைக்கும் நதிகள்
ஒப்பனை செய்தால் ...


பெண்கள் என்னும்
நீங்களே ஒரு
அற்புதம் ..
பிறகேன்
ஒப்பனை மீது வீண்
 கற்பனை ...

----------------------------------------------------------------------------------------------------------------------------------
படிக்கும் அன்பர்களே ஒப்பனை பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவிடலாம் இங்கே கருத்துக்களாக ...

திங்கள், 7 டிசம்பர், 2009

உனக்காக எழுதுகிறேன் ..

நீ சிரிக்க வேண்டும்
என்பதற்காகவே நான்
விழுகிறேன்
ஒவ்வொரு நாளும் ...


அந்த விண்மீன்கள்
நிறைந்த ராத்திரியை
இன்னும் மறக்கவில்லை ..
அன்றுதான் உன்னை
முதன் முதலாய் பார்த்தேன் ..


அன்று
கண்ணாமூச்சி ஆடும்போது
என்னை பிடித்துவிட்டதாய்
நீ சந்தோசமடைந்தாய்..
நானும் சந்தோசம் அடைந்தேன்
நீ என்னை பிடித்ததற்காக ..

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

நெனப்பு வருது ..


ஒத்தயில கம்மாவழி
போகையில ..
ஓன்
நெனப்பா வந்து
கொட்டுதம்மா
கண்ணுல கண்ணீரு
முட்டுதம்மா ..
நாம பள்ளிக்கூடம் போறேன்னு
சொல்லிபூட்டு
படுத்திருந்து வந்த எடம் ..
கள்ளிபழம் வேணுன்னு
நாங் கேட்க
நீ ஓடி பருச்சு
தந்த எடம் ..
நாம ஆழ மரத்து
விழுதுல
ஊஞ்சல் கட்டி ஆடின எடம் ..
படிக்க நான்
பட்டணம்
போறப்ப
நீ
ஓடி வந்து
அழுத எடம் ..
நான் கடுதாசி
போடுறப்ப - நீ
அய்யனாரு சாமிக்கு
படிச்சு காமிப்பன்னு
காளியம்மா கெளவி
சொன்ன எடம்
இந்த எடம் ..
நீ கிளி போல ஆசையா
சுத்தி திரிஞ்ச எடம் ...
ஆத்தாடி நீ
ஓடி ஆடி
திரிஞ்சது
இன்னும் கண்ணுக்குள்ள
தெரியுதம்மா ..
கண்ணுல கண்ணீரு
பெருகுதம்மா ..
நீ அவசரப்பட்டு என்ன விட்டு
போன எடம் ..
நான் இன்னும்
ஓன் நெனப்போடவே
இருக்குமெடம்..
-------------------------------------------------------------------
அவசரத்தில் தொலைத்த காதலின் வலி ..
உங்களுக்கும் இருந்தால் பகிரலாம்
கருத்துக்களாக ...

சனி, 5 டிசம்பர், 2009

எதார்த்தம் ..




எழுத நினைத்து

எடுத்தேன் பேனாவை ..

வரவில்லை வார்த்தைகள் ...

புரிந்துகொண்டேன்

கவிதையை

கட்டாய படுத்த கூடாதென்று ..




வெள்ளி, 4 டிசம்பர், 2009

நிராகரிப்பின் வலிகள் ..

வெயில் ஊரிதிரிந்த அந்த மதிய வேளையில் ராஜா, ஊரை கடந்து ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருந்தான் . வேம்புகள் நிறைந்த அந்த கரிசக்காட்டில் ஒரு வேப்பமரத்தின் அருகில் சென்று .. அந்த வேம்புவை பார்த்துக்கொண்டே இருந்தான் .

கண்களில் நீர் கசிய தொடங்கியது .வேம்புவை இறுக கட்டி கொண்டான் . அங்கே மொவ்னம் நிறைந்திருந்தது . மைனாக்களின் சப்தம் மட்டும் அந்த அமைதியை கலைத்து கொண்டிருந்தது . வேப்பம் பூவின் மனம் மட்டும் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தது .

இந்த கரிசக்காடு, இந்த வேம்புகள் , இந்த மைனாக்கள் ராஜாவிற்கு புதிதல்ல பால்யத்திலிருந்தே மனது கஷ்ட்டபடும் போது இங்கே வந்துவிடுவான் , காட்டிடமும், வேம்புவிடமும் , மரங்களில் கூடு கட்டி வாழும் மைனாக்களிடமும் பேசிக்கொண்டே இருப்பான் , யாரும் கேட்டு ஆறுதல் வார்த்தைகள் சொல்ல முடியாவிட்டாலும் , இதில் ஒரு சந்தோசம் அவனுக்கு இருந்தது .இப்போது ராஜாவிற்கு வயது இருவத்தைந்து, இந்த மரங்களுக்கோ வயது பதினெட்டு இருக்கும் . நேற்று வரை இந்த காடுகள் அனைத்தும் ராஜாவிற்கு சொந்தமாக இருந்தது , இன்று இந்த பொழுதில் இருந்தே இந்த காடு வேறொருவருக்கு சொந்தமாகிவிட்டதாக ஊரில் பேசியதை கேட்கும் போது ராஜாவால் தாங்க முடியவில்லை , அதனால்தான் இந்த வெயில் ஏறிய பொழுதிலும் காட்டை நோக்கி வந்து கண்ணீர் விட்டு கொண்டுள்ளான் .

பால்யத்தில் தன் தாத்தாவோடு வந்து இந்த காடுகளை அமைத்த நினைவுகள் வந்து சென்றுகொண்டிருந்தது . "டேய் ராசா ஒனக்கு ஏன் ராசான்னு பேர் வச்சேன்னு தெரியுமா . பின்பு அவரே சிரித்து கொண்டார் , டேய் கருவாயா.. (ராசாவை கருவாயா என கூப்பிடுவது ராசாவின் தாத்தா முத்து கருப்பனுக்கு பிடித்திருந்தது) ஒரு காலத்துல இந்த ஊருல இருக்குற காடுகலுல பாதி நம்ம சொத்தா தாண்ட இருந்துச்சு .. ஓங்க அப்பன் குடிச்சு சீரளுச்சுட்டு செத்துபோயிட்டான் இப்ப ஒனக்குன்னு இருக்குறது இந்த காடு மட்டுந்தாண்டா ..
நாளைக்கு நான் செத்து போனதுக்கு அப்புறம் இந்த காட்டுலேயே பொதச்சுருயா .. இப்ப கூட கோர்ட்டுல இந்த காட்டுகாக கேஸ் நடக்குது .. என தாத்தா முத்து கருப்பன் சொன்னது நினைவில் வந்தது ராஜாவிற்கு .

வெயில் இப்போது குறைந்திருந்தது , மரத்தில் ஏறி படுத்துகொண்டான் சோகம் கூடும்போது இவ்வாறு செய்வது பால்யத்திலிருந்தே ராஜாவிற்கு பழக்கமாய் இருந்தது .

ராஜாவின் தாத்தா இறந்த பின் தாத்தா கேட்டு கொண்டது போல இந்த வேம்புவின் அடியில் தான் புதைத்தார்கள் . கண்களை மூடினான் ராஜா வேம்புவின் இலைகள் ராஜாவின் மேல் வந்து விழுந்தது , காற்றில் கிளைகள் ஆடுவது தாலாட்டு பாடுவது போல் இருந்தது . கனவில் தாத்தா வந்து ஆறுதல் சொன்னார் " டேய் கருவாயா ஏண்டா அழுகுற ,கவலபடாம இறங்கி போயா என கூறிசென்றார். சிறுது நேரத்திற்கு பின் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து, அந்த கரிசல் காட்டை விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான் ராஜா . அப்போது வேம்புவின் கிளைகள் ஆடிகொண்டிருந்தது அந்த கிளைகளின் ஆட்டம் ராஜாவை போகாதே என கூறுவது போன்றிருந்தது ..

வியாழன், 3 டிசம்பர், 2009

நன்றி சொல்ல வந்தேன் ..


பூமியில் பிறந்த அனைவருக்குள்ளும் ஒரு ஒரு திறமை மறைந்துள்ளது , அதை அவர்களாகவே உணரும்போதுதான் அந்த திறமை வெளிவருகிறது , பலருக்கு தெரிகிறது . எத்தனையோ பேர் எழுதிகிறார்கள் எத்தனையோ பேர் நடிக்கிறார்கள் எத்தனையோ பேர் இசை அமைகிறார்கள் ஆனால் எல்லோராலும் ஏன் அங்கீகாரம் பெற முடியவில்லை ..

அனைவரும் செயல் படுவதே ஒரு அங்கீகாரத்திற்குதானே , அதை வெளியில் காட்டி கொள்ளா விட்டாலும் மனதில் அந்த ஆசைகள் இல்லாமல் யாரும் இல்லை . அவரவர்கள் தங்கள் படைப்பு அனைவரின் பார்வையில் படவே விரும்புவார்கள் , அதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல . விகடன் என்னை போன்ற இளம் படைப்பாளிகளின் படைப்புக்களை வெளியிட்டு எழுத்தாளர்களை மேலும் செயல் பட ஊக்குவிக்கிறது .இளம் படைபாளர்களின் சார்பாக நன்றி விகடன் . ..
விகடனில் வெளிவந்த எனது ஒரு சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும் ..

Menu